5 உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களின் வறுமையை போக்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 185 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 378 ரூபாவாகவும், உள்நாட்டு டின் மீன் (425 கிராம்) ஒன்றின் விலை 480 ரூபாவாகவும், மிளகாய்த்தூள் கிலோகிராமொன்றின் விலை 1780 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 1100 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச சிறப்பங்காடிகளில் இந்த புதிய விலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.