Headlines

Pathaan படத்தை ஜனவரி 26ம் தேதிக்குத் தள்ளி வைக்க முடியுமா? ஷாருக் கானிடம் கோரிக்கை வைத்த ரசிகர்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

நடிகர் ஷாருக்கானிடம் பதான் படத்தை ஜனவரி 26ம் தேதிக்கு தள்ளி வைக்க முடியுமா என்று ரசிகர் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து கடந்த வாரம் படத்தின் முதல் பாடல் வெளியானது. அந்த பாடல் காட்சியில் நடிகை தீபிகா படுகோனே வின் ஆடை காவி நிறத்தில் இடம் பெற்று இருப்பதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஷாருக் கான், தீபிகா படுகோனே இருவரின் கொடும்பாவியை எரித்து சிலர் போராட்டமும் நடத்தினர். மத்திய பிரதேச அரசு படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தது. ஜபல்பூரில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்ட படப்பிடிப்பிற்கு இந்து அமைப்புகள் தடங்கலை ஏற்படுத்தினர். மத்திய பிரதேச முஸ்லிம் அமைப்பான உலாமா போர்டும் ஷாருக்கான் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஷாருக்கான் பதான் படம் வெளியாவதையொட்டி எதைப்பற்றியும் கேளுங்கள் என்ற நிகழ்ச்சி சோஷியல் மீடியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்து வருகிறார். ரசிகர் ஒருவர் தனக்கு ஜனவரி 25ம் தேதி திருமணம் நடப்பதால் படத்தை ஜனவரி 26ம் தேதி வெளியிட்டால் தன்னால் படம் வெளியான முதல் நாளே பார்க்க முடியும் என்று டிவிட்டரில் ஷாருக்கானிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஷாருக்கான் அதற்கு அளித்துள்ள பதிலில், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் என்பதால் விடுமுறை.

எனவே குடியரசுத்தின அணிவகுப்பு முடிந்த பிறகு திருமணத்தை நடத்தவேண்டும் என்று தெரிவித்தார். அன்றைக்கு திருமணத்தை தள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மற்றொரு ரசிகரும் தனக்கு ஜனவரி 25ம் தேதி திருமணம் நடக்கிறது. நான் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஷாருக்கான் திருமணம் செய்து கொள்ளுங்கள். தேனிலவு விடுமுறையில் பதான் படத்தை பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply