Headlines

பதவியிலிருந்து விலகுவதாக எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின் ட்விட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

தான் ட்விட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து எலோன் மஸ்க் தமது ட்விட்டர் கணக்கினூடாக கருத்து கணிப்பொன்றை நடத்தினார். ‘கருத்துக் கணிப்பு முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்’ என்று மஸ்க் உறுதியளித்திருந்தார். அதற்கமைய, நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, 57.5 வீத வாக்குகள் மஸ்க பதவி விலக வேண்டும் என்றும், 42.5வீத வாக்குகள் பதவி விலகும் யோசனைக்கு எதிராகவும் அளிக்கப்பட்டன. கருத்துக்கணிப்பு முடிவினையடுத்து இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள எலோன் மஸ்க், ‘பதவியை பொறுப்பேற்கும் ஒரு முட்டாளை நான் கண்டுபிடித்த பின்னர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுகிறேன். அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேர்வர் குழுக்களுக்கு தலைமையாக செயற்படுவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Reply