வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. சியோல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்துள்ளது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவி சோதித்ததாகவும், அந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையில் கடலில் விழுந்ததாகவும் தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!
