Headlines

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியானது..!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் துணிவு படத்தின் 3-வது பாடலான ‘கேங்ஸ்டா’ வெளியானது. ‘துணிவு’ படத்தின் கதாபத்திரங்களை அறிமுகம் செய்து படக்குழு நேற்று புதிய போஸ்டர் வெளியிட்டது. இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Leave a Reply