
இன்று ஜனவரி முதலாம் நாள் 2023 காலை 11 மணிக்கு தமிழ் மரபுத் திங்கள் கொடியும் கனடா தேசிய கொடியும் கனடா தமிழ் கல்லூரி பணிமனை முன்பாக ஏற்றி வைக்கப்பட்டன.

தமிழ் மரபுத் திங்கள் கொடியினைத் திரு பொன்னையா விவேகானந்தனும் கனடா தேசிய கொடியினைத் திரு இரத்தின வேற்பிள்ளை கேதாரநாதன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

தமிழ் மரபுத் திங்கள் தொடக்க விழா எதிர்வரும் 7ஆம் தேதி மாலை 2.30 மணிக்கு ஸ்கா்பரோ மக்கள் மண்டபத்தில் (Civic center) இடம் பெற உள்ளது.