நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது
டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார்
இந்தியாவின் 74–வது குடியரசு தின விழா (ஜனவரி 26) நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
மக்களால் மக்களுக்காக என்பதே நமது இந்தியக் குடியரசின் கோட்பாடு.
தாய்த்திரு நாட்டிற்காக தம்மையே அர்ப்பணித்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்பு அதிகார ஆட்சியை முறியடித்து பாரத மக்கள் எல்லோரும் ஆனந்தமாக , சுதந்திரக் காற்றை சுவாசிக்க தேசத் தலைவர்கள் , புரட்சியாளர்கள் என்று பலரும் பாடுபட்டனர்.
நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம் போன்ற பற்பல போராட்டங்களை நிகழ்த்தி தமது குருதி சிந்தி, தமது உடல் பொருள் உயிரையே அர்ப்பணித்து போராடி விடுதலை பெற்றுத் தந்துள்ளனர் .
அவர்களது தியாகங்களால் 1947, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றோம். ஜனவரி 26 ஆம் தேதி ஏன் இந்தியக் குடியரசு நாளாகத்தேர்வு செய்யப்பட்டது ?