Headlines

மேதகு பிரபாகரன் தப்பிச்செல்லும் கோழை அல்ல’- சீமான் பதிலடி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய தகவல் பற்றி நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்13) ஈரோட்டில் கூறியதாவது:

என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள் தான் இருக்கின்றன. என் தம்பி பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பிச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிச் செல்லும் கோழை என்று நினைக்கிறீர்களா?

போர் புரிந்து ஒரு பெரிய பேரழிவை சந்தித்துள்ளோம் 15 ஆண்டுகள் பத்திரமாக ஒரு இடத்தில் பதுங்கி பேசாமல் இருப்பார் என் அண்ணா என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன் வந்துவிட்டு தான் சொல்லுவார். அதுதான் அவரது பழக்கம். தேவையில்லாமல் குழம்ப வேண்டாம்.

அவர்கள் கூறியது போல் ஒரு நாள் மக்கள் முன் தோன்றுவார் என்று கூறியதுபோல் தோன்றும்போது தோன்றட்டும். ஐயா பெரியாரிடம் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே திடீர் என்று கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டவருக்கு அவர் அன்றுமுதல் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுவோம் என்றார்.

Leave a Reply