
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இனாவாத கருத்துக்களை கூறியே கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியிருந்ததாக ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று பாசத்திற்கான யாத்திரை எனும் தொனிப்பொருளில் யாழ்நகரின் கையெழுத்து வேட்டையுடன் பேரணியும் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
அரச இயந்திரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென இளைஞர்கள் கோரிக்கையை முன்வைத்து வீதிக்கு இறங்கியதன் பலனாக இன்று புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாக உமாசந்திரா பிரகாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறானதொரு பின்னணியில் இந்த பேரணியும் புதிய தலைமுறையான இளைஞர்களினால் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அண்மைக்காலமாக இனங்களுக்கு இடையிலான முரண்பாடு மற்றும் சகோதரத்துவம், மத ரீதியிலான முரண்பாடு என்பன அதிகரித்துள்ளதாக உமாசந்திரா பிரகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்