Headlines

கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் யாழ். பல்கலைக்கழக மாணவன் கைது!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிலில் பயணித்ததவர்களை மறித்து சோனைக்குட்படுத்தப்பட்டபோது போலி நாணயத்தாள்களுடன் யாழ். பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒருவரும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் பெருமளவு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வேளையில் இராணுவ உதவியுடன் பளை பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 5000 ரூபாய் 250 போலி நாணயத்தாள்களும் 500 ரூபாய் 27 போலி நாணயத்தாள்களுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவரும் யாழ் மட்டுவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் ஆனையிறவு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்கள்.

Leave a Reply