
தற்போது சிறுவர்களை கடத்தும் சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் பதிவாகிவரும் நிலையில் உங்கள் உறவினர்கள், பிள்ளைகள் தொடர்பில் விளிப்பாயிருங்கள்..
இன்று கிளிநொச்சி உருத்திரபுரம் D8 பகுதியில் 12 வயது சிறுவனை நான்குபேர் கொண்ட குழு கார் மற்றும் மோட்டார்வண்டிகளில் முகங்களை மறைத்தவாறு கத்திகளுடன் வந்து மிரட்டி சிறுவனை கடத்த முற்பட்ட வேளை குறித்த சிறுவன் தப்பியோடிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைபோல் யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி..! மக்களால் ஒருவர் மடக்கிப்பிடிப்பு!

யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதைபோல் தலைமன்னார் பகுதியில் சிறுவர் கடத்தல் சம்பவம் ஒன்று பொது மக்களின் உதவியுடன் முறியடிப்பு