
சந்துரு மற்றும் மேனகா இவர்கள் இருவருக்குமே மலையகத்தோடு நேரடி தொடர்பு இல்லாத இரு நபர்கள்.. சூரியன் ஊடகப்பிரிவில் முன்னணி தொகுப்பாளரான இவர்கள் தற்போது தனியான YOUTUBE CHANNEL ஒன்றை நடத்தி வருகின்றனர்..
குறிப்பாக தனது ஓய்வு நாட்களை வெவ்வேறு இடங்களில் இரசிக்க செல்லும் இவர்கள் அன்று மலையகத்தை வந்தடைந்தனர்.. அன்றைய தினம் நம் மக்களோடு மக்களாக இணைந்து எம்மவரின் 200 வருட இன்னல்களை தெரிந்துக்கொண்டனர்.. அதனை ஒரு காணொளியாகவும் வெளியிட்டனர். அதன் பலனாக 17 இலட்சம் உதவி கிடைக்கப்பட்டது.
குறிப்பாக ஒரேயொரு காணொளி இன்று மலையகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் போது 200 வருடங்களாக பல்வேறு ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருப்பதன் காரணமேன்ன?
” அடிமை அடிமையாகவே இருக்கும் போதே எஜமான் தோற்றம் பெறுகின்றான்”
என்ற வாசகத்திற்கு ஏற்றது போல் இன்னும் எத்தனை காலம் நாம் அடிமைகளாவே காணப்படுவது?
முதலில் தேர்தல் காலங்களில் மதுப்பானத்திற்கும், சோறு பார்ஷளுக்கும் அரசியல் கட்சிகளுக்கு விசுவாசிகளாக செயல்படும் நாம் சற்று சிந்தித்து நமக்கு எது தேவை, என்ன மாற்றம் வேண்டும், சமூக ஊடகத்தில் நமது உரிமைகளையும், தேவையையும் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர வேண்டும்.
