
பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதால் அந்நாடே கடந்த 4 நாட்களாக வன்முறைக் காடாக மாறியுள்ளது. அங்கு வன்முறை மெல்லமெல்ல குறைந்துவரும் சூழலில் சிறுவனின் இறுதிச்சடங்குகள் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளன. ஆனால், மற்ற இடங்களில் நீடிக்கும் வன்முறையில் கடைக்குள் புகுந்து வன்முறையாளர்கள் துப்பாக்கிகளை திருடிச் சென்றது அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்காவது நாளாக நீடிக்கும் வன்முறை தொடர்பாக இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் டிராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.