பஞ்சாப்பை தலைமையிடமாக கொண்டு தங்களுக்கு காலிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சீக்கியர்கள் இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எனினும் இந்த கிளர்ச்சி இந்தியாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீக்கியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
எனினும், காலிஸ்தான் இயக்கங்களை சேர்ந்த சில தலைவர்கள் அண்மையில் ஆங்காங்கே கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்மையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர் சுற்றி வளைத்து சூறையாடினர்.
இவ்வாறான நிலையில் பிரித்தானியாவை போன்று கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் றொரன்ரோவில் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.