



அறிவகத்தின் கோடைகால ஒன்றுகூடல் 2023 நிகழ்வு கனடா ஸ்காபரோ தொம்சன் பூங்காவில் ஆகஸ்ட் 13, 2023 ஞாயிற்றுக்கிழமை பெரும் எண்ணிக்கையான மாணவர்கள், பெற்றார்கள், ஆசிரியர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும், வேடிக்கை நிகழ்ச்சிகளும், பெற்றார், ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் போட்டிகளும் இடம்பெற்றன.

சுவைமிகு உணவுகள், சிற்றுண்டி வகைகள், பானங்கள் என நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.




