
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெருமிடங்களுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா அவர்களின் பணிப்பின் பெயரில் உயர்மட்ட அதிகாரிகள் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெரும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையுற்றுள்ளனர்.
இரணைமடு குளத்தின் ஆற்றுப்படுக்கைகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக தெரிவித்ததை அடுத்து அவ்வாறான இடங்களை இனம் கண்டு சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் காவலரங்களை அமைக்க வேண்டிய இடங்களை அடையாளப்படுத்தியதோடு குறித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் ஈடுபடுபவர்களை சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் அதிகாரிகள் தெரியப்படுத்தி உள்ளனர்.