திருகோணமலை பெரிய குளம் பகுதியில் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதஙகளாக பெளத்த பிக்குகளினால் அந்த பிரதேசத்தில் பெளத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் குறித்த பிரதேசம் தனித் தமிழ் மக்கள் வாழும் பிரதேசம் என்பதால் அங்கு விகாரை அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுநர அவர்களாளும் விகாரை அமைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்த போதிலும் பெளத்த பிக்குகள் எதற்கும் செவி சாய்க்காது தமது செயலில் குறியாக இருந்து ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்ததும் நாம் அறிந்த ஒன்றே.
அதனடிப்படையில் குறித்த பிரதேசத்தில் “பெரலு கந்த ரஜமகா விகாரை” என சில வாரஙகளுக்கு முன்னர் பலகை வைக்கப்பட்ட நிலையில் இந்த புத்த சிலைகள் நேற்றைய தினம் வைக்கப்பட்டுள்ளது அப்பிரதேச மக்களிடையே பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.


