Headlines

ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறியொன்று விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது!!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தீபாவளிக்கு விற்பனை செய்ய பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றே இவ்வாறு வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் காலை சுமார் 6.15 மணியளவில் ஹட்டன் பிரதான வீதியான வட்டவளை சிங்களக் கல்லூரிக்கருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான லொறியில் மூன்று பேர் பயணித்துள்ளதுடன் லொறியில் பயணித்த சாரதி படுகாயமடைந்த நிலையில் வட்டவளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது…

Leave a Reply