Headlines

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமையாற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி (08.11.2023) உயிரிழந்துள்ளார். எதிர்வரும் (17.11.2023) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹர ஜோதி மண்டல பெருவிழா இடம் பெற இருக்கின்ற நிலையில் குறித்த கோயிலில் நிறம் பூசும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் பூசை உதவியாளரான குறித்த சிறுவன் கோயிலுக்கு மேல் மாடிக்குச் சென்று மின் குமிழ்களை பொருத்திக் கொண்டிருந்த வேளையில் மின்சாரம் தாக்கியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

Leave a Reply