Headlines

யாழில் வீடுகளை உடைத்து கொள்ளை!! அண்ணனும் தங்கையும் கைது!!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

யாழில் வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக பெண் உட்பட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி பரமேஸ்வரா சந்திக்கு அண்மையிலுள்ள வீட்டில் அதிகாலை வேளை ஆட்கள் இல்லாத நேரம் வீடு உடைத்து ஐந்தே கால் பவுண் நகைகளை களவெடுத்தமை மற்றொரு வீட்டில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் 13 பவுண் நகைகளை திருடியமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார், மற்றொரு வழக்கில் முன்னிலையான இளைஞன் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் திருட்டு தகவல்களை பெற்றனர்.

திருநெல்வேலி மாரியம்மன் வீதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே இந்த திருட்டுக்களை மேற்கொண்டவர்.

அவர் திருடிய நகைகளை அடகு வைத்த அவரது தங்கை, நகைகயை வாங்கி உருக்கிய ஒருவரையும்கைது செய்துள்ளனர்.

https://chat.whatsapp.com/HxMHX0A0g9d17Zrpk86k7H

Leave a Reply