Headlines

வீடுகளுக்குள் நிர்வாணமாக புகுந்து பெண்கள் துாங்கும் போது உள்ளாடைகளைக் களைந்து பார்த்தவன் பிடிபட்டது எப்படி?

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

நிர்வாணமாக வீடுகளுக்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடைகளை திருடி பெண்கள் உறங்குவதை பார்த்து மகிழ்ந்த நபர் ஒருவர் அதுருகிரிய பக்மீகஹா வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்யும் போது கைத்தொலைபேசி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுருகிரிய போரே மற்றும் பிரதேசங்களில் இரவு வேளையில் பக்மீ கஹா வீதியில் நிர்வாண நபர் ஒருவர் சுற்றித்திரிவதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் பிரதேசவாசிகளின் ஆதரவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். முகம் முழுவதும் தாடியுடன் இருந்த சந்தேகநபர் விடுதி ஒன்றில் தாடி,தலைமுடி போன்றவற்றை நீக்கி மாறுவேடமாக மறைந்திருந்த நிலையில் பிடிபட்டுள்ளார்.
சில காலமாக பிரதேச மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த இந்த நிர்வாண நபர் கைது செய்யப்பட்ட போது, ​​அப்பகுதி மக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அதுருகிரிய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருமணமான சந்தேக நபரும் தனது கிராமத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் அவரை அப்பகுதியில் தங்க வைக்க முடியாத காரணத்தினால் கொழும்புக்கு வேலைக்காக அனுப்பப்பட்டதாகவும் சந்தேக நபரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply