Headlines

மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

❇️யாழ்பாணம் சோனெழு-கோப்பாய் மத்திய பகுதியில் மகன் ஒருவர் நேற்று முன்தினம்(07) விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை உயிரிழந்துள்ளார். முத்துத் தம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

❇️இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபரின் இரண்டாவது மகன் நேற்று விஷம் அருந்தியதனால் அதிர்ச்சியில் தந்தையார் மயங்கியுள்ளார்.

❇️இந்நிலையில் அவரை உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

❇️பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

❇️விஷம் அருந்திய மகன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

https://chat.whatsapp.com/HxMHX0A0g9d17Zrpk86k7H

Leave a Reply