வட இலங்கையை அண்டிய வளிமண்டலத்தில் நிலவும் மெலிந்த காற்று சுழற்சியின் காரணமாக கடந்த 36 மணிநேரமாக வடக்கில் பரவலாக தொடர்மழை பெய்துவருகின்றது.
இது இவ்வாறே தொடரும்போது, மத்திய வங்காளவிரிகுடாவில் இருந்து இன்னொரு தாழமுக்கம் உருவாகி இந்தியாவின் ஒடிசா/ கொல்கத்தா நிலப்பரப்பை நோக்கி நகர்வை ஆரம்பித்திருக்கிறது.
குறித்த இரண்டாவது மழைநிகழ்வானது வலுவடைந்து இந்தியாவை நோக்கி நகரும்போது, இன்று இரவுமுதல் இலங்கையில் நிலவும் மெலிந்த காற்று சுழற்சிக்கு வெப்பக்காற்று (மழைமேகங்களை உருவாக்குவது) கிடைப்பது குறைவடையும். இதனால் இன்று 16/11/23 வியாழக்கிழமை முதல் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தொடர்மழையின் தாக்கம் குறைவடைந்து வானிலை ஓரளவுக்கு சீரடையும்.