காலி, தடல்ல பிரதேசத்தில் இன்று (18) பிற்பகல் 1.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தடல்ல பிரதேசத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக வீதிக்கு அருகில் நின்றிருந்த இருவர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும், காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
𝐍𝐄𝐖𝐒 |||✯
https://chat.whatsapp.com/Bh6ERJUi0lI5cRTsUstIuo
🎀 Priya T🎀Harshan