Headlines

கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதி இன்று….

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், அவுஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில் புதிய உலக சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 3வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. அதேவேளையில் தனது 6வது சம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடனுள்ளன. இறுதிப்போட்டி மதியம் 2 மணிக்கு ஆரம்பமாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply