குடும்பத் தகராறு காரணமாக மனைவி தாக்கியதில் கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று திஸ்ஸமஹாராம, கவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் அவரது கணவரின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த நபர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 47 வயதுடையவரென தெரிவிக்கப்படுகிறது.
கொலையுடன் தொடர்புடைய 42 வயதுடைய உயிரிழந்தவரின் மனைவி திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.