❇️மத்துகமை – பதுரலிய – இலுக்பொத பகுதியில் உள்ள விருந்தகத்தின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
❇️வெலிவேரிய பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி தமது பெற்றோருடன் சுற்றுலா மேற்கொண்டு அந்த விருந்தகத்திற்கு வருகைத்தந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
❇️அவர் தமது குடும்பத்தினருடன் அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் நீராடிய போது இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
❇️இதனையடுத்து, குறித்த சிறுமி மீட்கப்பட்டு, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.