Headlines

ஹட்டன் பகுதியில் கடந்த (2023.06.29) திகதி காணாமல் போன நபர் சாமிமலை காட்டுப் பகுதியில் மனித எலும்புக்கூடு

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஹட்டன் பகுதியில் கடந்த (2023.06.29) திகதி காணாமல் போன நபர் சாமிமலை காட்டுப் பகுதியில் மனித எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரன பிலான்டேசனுக்கு ஓல்டன் தோட்ட நிலாவத்தை உள்ள வன பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 76 வயதுடைய காளிமுத்து கிட்னசாமி இருதியாக அணிந்திருந்த உடையிலேயே எழும்புகளாக காணப்பட்டத்தைடுத்து அத் தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்திடம் கூறியதை தொடர்ந்து நிர்வாகம் மஸ்கெலியா பொலீஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப் பிரதேசத்தைச் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து ஹட்டன் நீதிமன்ற நீதிவான் அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

அந்த மனித எச்சங்களை பார்த கிட்னசாமி கிருஷ்ணசாமி என்பவர் பார்த்து தனது தந்தை என அடையாளம் கண்டு கொண்டதுடன்,

தடையவியல் பொலிசார் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் வன பகுதிக்கு சென்று பார்வை இட்ட பின்னர் மனித எலும்புகளை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…

Leave a Reply