ஒன்றுக்கு மூன்று பேரை விடுவிப்போம் என்ற அடிப்படையில் யுத்த நிறுத்தம் இன்று(23) முதல் அமுல்படுத்துவதற்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஹமாஸ் போராளிகளால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் இஸ்ரேலிய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் தலா 3 பேரை விடுவிப்பதற்கு இஸ்ரேலிய தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் வசம் இருப்பதோ வெறும் 150 அல்லது 200 கைதிகள் மட்டுமே!
ஆனால் ஒக்டோபர் 7 முதல் இதுவரைக்கும் சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானோரை இஸ்ரேல் கண்ணை கட்டி கடத்திச்சென்று சிறை வைத்துள்ளது.
நியாயப்படி ஒருவருக்கு தலா 30 பேர்களை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும்.
காஸாவின் வெஸ்ட்பேங்கில் தினமும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேலிய ஒருவருக்கு பதிலாக பலஸ்தீனத்தின் தலா 3 பேரை விடுவிப்போம் எனும் “நாடகமானது” பண்டிகை காலத்தில் அதிக விலை அடித்து விட்டு டிஸ்கவுண்ட் கொடுப்பது போன்ற நகைச்சுவைக்கு ஈடானதாகும்.
இதேவேளை மேற்கு காஸாவில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் அங்கு குடியேற முடியாதென்ற கட்டளையும் இஸ்ரேலிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.