கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் இரு யுவதிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது!!
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹாலிஎல உடுவரை 6 ம் கட்டை பிரிவில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாலை சுமார் 5.20 மணியளவில்
வீட்டில் இரு யுவதிகள் இருந்த வேளை வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்தமையினால் இரு யுவதிகளும் பலத்த காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த யுவதி கெந்தகொல்லபதன உடுவரை ஹாலிஎல பகுதியை சேர்ந்த (23) வயதுடைய யுவதியும் நாபொலவத்த மத்திய வீடு ஹாலிஎல பகுதியை சேர்ந்த (20) வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்…