Headlines

திருடச் சென்ற வீட்டில் குறட்டைவிட்டு தூங்கிய திருடன்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

 
❇️தென்மேற்கு சீனாவில் உள்ள வீடொன்றில் திருடச் சென்ற திருடன் அந்த வீட்டிலேயே குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

❇️குறித்து வீட்டுக்குள் இரவில் திருட சென்ற திருடன், வீட்டிலுள்ள அனைவரும் உறங்காமல் இருப்பதனை கண்டுள்ளார்.
இதனால் அவர்கள் உறங்கும் வரை காத்திருக்கலாம் என ஒரு அறையில் இரகசியமாக காத்திருந்துள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் குறித்த திருடனுக்கு தன்னை அறியாமலேயே தூக்கம் வந்துள்ளது.
இதனால், அவர் அங்கு நித்திரை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

❇️பின்னர், வீட்டில் இருந்த நபர்களும் உறங்குவதற்காக சென்றுள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் யாரோ ஒருவர் குறட்டை விடுவது போன்ற சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கண் விழித்துள்ளனர்.

❇️பின்னர் வீட்டில் உள்ள அறைகளை சோதித்த பொழுது, குறித்த திருடன் குறட்டை விட்டு தூங்குவதனை கண்டுள்ளனர். பின்னர் அவரை கால்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply