பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (24) கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
“இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்” ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டனர்.