Headlines

வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த நா.அலெக்சின் மரணம் தொடர்பில் 5 பொலிசாரை கைது செய்ய  யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராஜா உத்தரவு.

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

நவம்பர் மாதம் 8ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிசாரனால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவரான நாகராசா அலெக்சின் மரணம் இயற்கையானதா அன்றி மனித உயிர்ப்போக்கா எனக் கண்டறியும் விசாரணைநேற்றைய தினம் (24) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே நீதவான் தனது கட்டளையின்போது இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விசாரணையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழந்த நா.அலெக்சுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் மற்றும் ஓய்வு பெற்ற ஆயுள்வேத வைத்தியர் ஆகியோருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

இவற்றின் அடிப்படையில் இடைக்கால கட்டளையிட்ட நீதவான்
இயற்கையானது அன்றி ஏற்படுத்தப்பட்ட மனித உயிர்ப் போக்கிற்கு காரணமானவர்கள் என உடன் இருந்த சந்தேக நபரினால் பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறிய 3 பொலிசாரையும் கைது செய்யுமாறும் ஏனையோரை கைது செய்யும் வகையில் சாட்சியினால் கூறப்பட்ட அடையாளங்களை ஒத்தவர்களை இனம்காண அடையாள அணவகுப்பு நடாத்த ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கான கட்டளையை நீதிமன்ற பதிவாளரை அனுப்பி வைக்குமாறு கட்டளையிட்டதோடு உயிரிழந்தவருடன் உடன் இருந்த இரண்டாம் சந்தேக நபரும் 3வது சாட்சியுமானவரை பொலிசார் சில விடயங்களை இனம் காண அழைத்துச் செல்ல கோருவதனால் இரு சட்டத்தரணிகள் சகிதம் அழைத்துச் செல்லவும் கட்டளையிடப்பட்டது.

Leave a Reply