அம்பாறை பன்னல்கம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறந்தவரின் மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றுள்ளார்.
அக்காலப்பகுதியில் தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளிநாட்டில் உள்ள தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
அதன்படி, இது குறித்து விடயம் தொடர்பில் பெண் தனது கணவரிடம் வினவிய நிலையில், சம்பவம் குறித்து பொலிசாருக்கு அறிவித்தால், குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கணவன் மிரட்டியதாக அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அந்த அச்சுறுத்தலுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவிக்க தாய் நடவடிக்கை எடுத்திருந்தார்.
தகவல் கிடைத்ததும் உடனடியாக செயற்பட்ட தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது திடீரென வீட்டுக்குள் ஓடிய அந்த நபர், அங்கிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.