Headlines

அந்தமான் அருகே தாழமுக்கம்..!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அந்தமான் அருகே உருவாகியுள்ள தாழமுக்கம் மேலும் வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலை அண்மிக்கும். அந்த நேரத்தில் 30ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் டிசம்பர் 2 ம் திகதி வரை இலங்கையின் வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியை எதிர்பாக்கலாம்.

எவ்வாறாயினும், கடல் வெப்பநிலை மற்றும் ஏனைய வழிமண்டல புறக்காரணிகளின் தாக்கத்தால் தாழமுக்கமானது மேலும் வலுவடைந்து தாழ்வுமண்டலமாகவோ அல்லது புயலாகவோ உருவெடுத்து வடக்கு-வடமேற்கு நோக்கி திசைமாறி கிழக்கிந்திய கரையோரம் மெதுவாக பயணிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.

இதன்விளைவாக, 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் வடக்கு மாகாணம் முழுவதும் மழையின் தாக்கம் குறைவடைந்து வானிலை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரப்போகும் இந்த மழை நிகழ்வு தொடர்பாக நெல்விவசாயிகள் பெரியளவில் அச்சம் கொள்ள தேவையில்லை.

Leave a Reply