தனது நாட்டுக்கு சென்ற பின் தன்னால் கருத்து எதையும் தெரிவிக்க முடியாதென்பதை நன்கறிந்த இஸ்ரேலிய பெண் ஒருவர் காஸாவில் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது கடிதம் ஒன்றை எழுதி ஹமாஸிடம் ஒப்படைத்திருந்தார்.
அதை அந்த பெண் விடுவிக்கப்பட்டு இஸ்ரேல் சென்று 3 நாட்களின் பின்னர் ஹமாஸ் வெளியிட்டது. அது வைரலானது, பலரது கவனத்தை ஈர்த்தது.
எனினும் அந்த தாயின் அன்பான கருத்தானது “சமூக தரநிலை” (Community Standard) சட்டதிட்டங்களுக்கு எதிரானதென கூறி பேஸ்புக் நீக்கி வருகிறது.
விடுவிக்கப்படும் எந்தவொரு இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டவர் எவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கூடாதென்றும், ஊடகங்கள் அவர்களிடம் கருத்து கேட்கக்கூடாதென்றும் இஸ்ரேலிய தரப்பில் கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகளை விடுவிக்கும் போது இறுதியாக அவர்களின் #முகபாவனை, கைசைகை, கண்கலக்கம், அன்பாக ஆரத்தழுவி அனுப்பிவைக்கும் எந்தவொரு காட்சிகளையும் அவர்களது பாதுகாப்பு நலன்கருதி ஹமாஸ் வெளியிடவில்லை.
அல்ஜஸீரா உட்பட அதிகாரமளிக்கப்பட்ட அனைத்து சனல்களும் கடைசி தறுவாயில் அவர்கள் கண்கலங்கி செல்லும் காட்சிகளை #கட் செய்தே வெளியிட்டு வருகின்றன.
விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் அங்கு தம்மை எவ்வாறு கவனித்தார்கள், எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை வெளி உலகம் அறிந்து கொள்ளுமானால் அது இஸ்ரேலுக்கும் இஸ்ரேலிய பொய் பிரச்சாரங்களுக்கும் பெருத்த அபகீர்த்தையும், அவமானத்தையும் பெற்றுத்தரும் என்பது இஸ்ரேலுக்கு தெரியும்.
அதனால்தான் விடுவிக்கப்படும் பணயக்கைதிகளை நேரடியாக தம் வீடுகளுக்கு அனுப்பாமல் விசேட ஹெலிகொப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதாக கூறி அங்கு மனமாற்றம் செய்யப்பட்டு, கண்டிசன்கள் விதிக்கப்பட்டு ரகசிய மேற்பார்வையுடன் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பெண்மணி ஒருவர், ஹமாஸ் போராளிகள் பற்றி எழுதிய அன்பு வார்த்தைகள் கொண்ட கடிதம் வைரலாக பரவிய போது பேஸ்புக் நிறுவனம் அதை நீக்கி வருகிறது.