இன்று காலை சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்ட ஓட்டையன் மடு வயல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து உயிரிழந்தவரின் உறவினர் வந்து அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த 03 நாட்களாக வயலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் #காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிக்குடி குறுமன்வெளி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட (41) வயதுடைய செல்வநாயகம் சதீஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…
