Headlines

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் – நாங்கள் மக்கள் பக்கம் இருக்கிறோம் ; மகிந்த

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com


அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார்.

அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதிக்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறி உள்ளார்.

நிருபர் : அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்

மகிந்த : வருவாங்க, போவாங்க.. அரசியல்ல அப்பிடித்தானே இனி..

நிருபர் : மக்களுக்கு நல்லது செய்பவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என மக்களிடம் எண்ணம் தோன்றி உள்ளது..

மகிந்த : அப்படி ஒன்றும் இல்லை, நல்லதா கெட்டதா என்று அவரவர் நினைப்பதில் தானே உள்ளது.

இதேவேளை, தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான தேர்தல் பிரசார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடக்கவுள்ளது.

இந்த சம்மேளனத்தின் போது, கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply