Headlines

20 வயது நபரை முதலை இழுத்துச் சென்று கொன்ற சோக சம்பவம் பதிவு – காப்பாற்ற மனைவி எடுத்த முயற்சியும் கைகூடவில்லை

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தொடுவான் குளத்தில் குளிப்பதற்கு சென்றவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் ஒன்றை பார்வையிட்டு வருகின்ற நிலையில் கணவனும் மனைவியும் குளிப்பதற்காக நேற்று தொடுவான் குளத்திற்கு சென்ற போது கணவரை முதலை இழுத்துச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

குளத்தின் கரையில் இருந்த மனைவி கணவனை காப்பாற்ற முயற்சித்த போதும் காப்பாற்ற முடியாது போனதாகவும், இதனை அடுத்து பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல மணி நேரம் குளத்தில் தேடுதல் மேற்கொண்ட பின்னர் சடலம் நேற்று மாலை 5.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர்-பாட்டாளிபுரத்தில் வசித்து வரும் கதிர்காமத் தம்பி நிதுர்ஷன் (20 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://chat.whatsapp.com/HxMHX0A0g9d17Zrpk86k7H

Leave a Reply