Headlines

கிழக்கு மாகாண ஆளுநர் நேரில் அழைத்து பாராட்டு!!….

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

GCE O/L பரீட்சையில் திருகோணமலை, ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் ஆறாம் இடம்! கிழக்கு ஆளுநர் நேரில் அழைத்து பாராட்டினார்!!

திருகோணமலை, ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்சனா கோணேஸ் க.பொ.த சாதரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் 6 ஆம் இடத்தையும் தமிழ் மொழி மூலமாக இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். இம்மாணவியை நேரில் அழைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் கல்வி நடவடிக்கையில் அக்கறை செலுத்திய அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் மாணவியின் வேண்டுகோளின் பேரில், பல நாட்களாக இழுபறியில் இருந்த காணியை அப்பாடசாலைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply