Headlines

யாழ்ப்பாணம் நாவற்காட்டு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

யாழ் பருத்தித்துறை பிரதான வீதி அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இவர் புத்தூர் பகுதியைச் சேர்ந்த (22) வயதுடைய சிவநேசன் சியான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறிய ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…

Leave a Reply