மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (02) காலை 03 பாடசாலை மாணவர்கள் மெட்டியகனே மஹாவெவவில் நீராடச் சென்ற வேளையில் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
பின்னர், மாணவர்களும் பிரதேசவாசிகளும் நீரில் மூழ்கிய மாணவனைக் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் ஏற்கனவே மாணவர் உயிரிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.