இல்லத்தின் மேற்பார்வையாளர் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்த உயிரிழந்ததையடுத்து அந்த பெண் மேற்பார்வையாளரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொக்குவில் எல்லை வீதியைச் சேர்ந்த (14) வயதுடைய நாராயண ஆனந்ததேவன் தர்சாத் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த நவம்பர் 16 ஆம் திகதி கொக்குவில் கொம்புமுறிச்ச சந்தி பிள்ளையார் ஆலையத்தில் பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனையும் பூசாரி ஒருவரையும் பிரதேச மக்கள் பிடித்து கொக்குவில் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்
இதில் கைது செயயப்பட்ட இருவரையும் 17 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறும் பூசாரியை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதனையடுத்து குறித்த சிறுவனை கல்முனை சிறுவர் இல்ல வீதியில் உள்ள கிழக்கு சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பவதினமான நவம்பர் (30)ஆம் திகதி குறித்த இல்லத்தினுள் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பராமரிப்பு நிலையத்தில் சிறுவன் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் இல்ல பெண் மேற்பார்வையாளர் கோபமடைந்து சிறுவன் நெஞ்சில் தாக்கியதாகவும் அதன் பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தடயவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றதுடன் சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு,
பிரேத பரிசோதனையில் சிறுவன் மீது அடி காயங்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவர் பராமரிப்பு இல்ல பணிப்பாளரை நேற்று சனிக்கிழமை கைது செய்தனர் சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் தனது மகனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பொலிசார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் எனது மகனின் உயிரிழப்புக்கு நீதி கூற வேண்டும் என நேற்றைய தினம் கொக்குவில் போலீஸ் நிலையத்திற்கு முன்பாகவும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து எனது மகனை கொன்றவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது…