❇️குருநாகல் பிரதேசத்தில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
❇️தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பகிர முயற்சித்த தந்தை அவரது மனைவியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
❇️யூடியூப் சேனலை திறந்து, அதனை பிரபலப்படுத்துவதற்காக இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சேகரித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
❇️மனைவியையும் அவரது மகனையும் பூட்டிவிட்டு குறித்த நபர் மகளை அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்றபோது அவரது மனைவி வீட்டிற்குள் நுழைந்து, அவரது கண்களில் மிளகாய்ப் பொடியை எறிந்து, அவரை வாளால் தாக்கியுள்ளார். இதில் தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
❇️இக்கொலை நேற்று முன்தினம்(05) பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார என்ற 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
❇️இந்நிலையில் படுகொலை செய்த சந்தேகத்திற்குரிய பெண்ணை வெல்லவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.