Headlines

முச்சக்கர வண்டியும் காரும் மோதி விபத்து உள்ளானதில் முச்சக்கர வண்டி சேதம்.

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

யாழ்ப்பாணம்- அச்சுவேலி இராச வீதியின் , நீர்வேலி மாசுவன் சந்திப்பகுதியில் இடம் பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது .

சுதுமலையிலிருந்து அச்சுவேலி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி , மீது நீர்வேலி பகுதியிலிருந்து அச்சலு நோக்கி பயணித்த கார் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி தூக்கி வீசப்பட்டு முற்றாக சேமடைந்துள்ளது.

வவுயாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்கு வந்த காரில் பயணித்தவர்கள், இந்த விபத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.

காரில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பிள்ளனர். இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியான இரத்னம் ஆனந்தராஜா வயது 62 என்பவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

Leave a Reply