Headlines

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர் மன்னார் மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் 02-அக்டோபர்-2009 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ சேவையில் இருந்தபோது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்தார்.

குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது.

முருங்கன் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தீர்ப்புக்காக இன்றைய தினம் (6) மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Leave a Reply