Headlines

புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதி!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதி!

புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் அமைக்கப்பட்ட பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.

இரணைமடு பொதுச்சந்தை, பாடசாலை மற்றும் தொழில் உள்ளிட்ட அன்றாட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு குறித்த வீதி இன்றியமையாததாக உள்ளது.

இந்த நிலையில் குறித்த பாலம் 2019ம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்பட்டதுடன் அதன் பாதுகாப்பிற்கான பணிகள் 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக 11 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை இப்ப பாலம் உடைந்து விழுந்துள்ளது.

இன்று காலை தொழிலுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பாலம் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply