அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படத்தை தனது “பேஸ் புக்” ( முகநூல்) கணக்கில் நபர் ஒருவர் பதிவு செய்து இருந்ததாக குறித்த பெண் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொண்ட குற்ற புலனாய்வு திணைக்களதினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து இன்று (07) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்.
வழக்கு தொடர்பான விசாரணையின் போது குறித்த சந்தேகநபர் தமது குற்றத்தினை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அக்கரைப்பற்று நிதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்ஹம்சா தீர்ப்பளித்தார்.
NEWS |||✯
https://chat.whatsapp.com/Bh6ERJUi0lI5cRTsUstIuo
❣️ Priya ❣️▪️Harshan