எரிபொருள் விற்பனை மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒவ்வொரு லீட்டர் எரிபொருளிலும் 13 ரூபாவுக்கு மேல் இலாபத்தை ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் மூலம் ரூ.13.60 இலாபமும், ஒக்டேன் 95 பெட்ரோல் ஒர லீட்டர் மூலம் 16.36 இலாபமும் கிடைக்கப் பெறுகிறது.
அதேநேரம், டீசல் லிட்டருக்கு ரூ.13.27 இலாபமும், சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.16.69 இலாபமும் கிடைக்கிறது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தரவுகளிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது