Headlines

மனையியல் பாடத்தில் தயாரித்த உணவை உட்கொண்ட 12 மாணவர்களுக்கு திடீர் ஒவ்வாமை!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

❇️கம்பஹா – மீரிகம, வெவல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மனையியல் பாட வேளையயில்  தயாரிக்கப்பட்ட  உணவை உட்கொண்ட 12 மாணவர்கள் திடீர் உடல் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

❇️பாடசாலை ஒன்றின் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு சுகயீனமடைந்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் மீரிகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

❇️இவர்கள் பாடசாலையில் மனையியல் பாட நேரத்தில் உணவொன்றை தயாரித்திருந்ததாகவும் அதை உட்கொண்ட பின்னர் உடல் முழுவதும் அரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

❇️இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெவல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply